கர்ப்பிணி எஸ்.ஐ தற்கொலை : இன்ஸ்பெக்டர் கைதாகிறார்
கருத்துகள்
சேலம்: சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் ஜெயபிரபா (30). விவாகரத்தான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் மகன் ஹரீசுடன் (8) வசித்து வந்தார். ஜெயபிரபாவுக்கு ஈரோட்டை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரையுடன் பழக்கம் ஏற்பட்டது. தற்போது ராஜதுரை திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஈரோட்டில் மனைவி, 2 குழந்தை இருக்கும் நிலையில், எஸ்ஐ ஜெயபிரபாவுடன் சேலத்தில் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
ராஜதுரை நேற்று இரவு சேலம் வந்தார். ஜெயபிரபாவுடன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயபிரபாவின் தாய் கல்யாணி, அண்ணன் ஜெயபிரகாஷ் ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் ஜெயபிரபாவை இன்ஸ்பெக்டர் ராஜதுரை அடித்துள்ளார். இதனால் வேதனையடைந்த அவர், வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டுள்ளார். அவர் இதுபோல அடிக்கடி செய்வதால் யாரும் கதவை திறக்க முயற்சிக்கவில்லை. 3 மணி நேரமாக கதவை திறக்காததால் சந்தேகம் ஏற்பட்டு ஜன்னல் கதவை உடைத்து பார்த்தபோது, உள்ளே ஜெயபிரபா தூக்கில் சடலமாக தொங்கியது தெரிந்தது. தகவலறிந்து வநத கன்னங்குறிச்சி போலீசார் சடலத்தை கைபற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
எஸ்ஐ ஜெயபிரபாவின் அண்ணன் ஜெயபிரகாஷ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேலம் ஆர்டிஓ விசாரணைக்கு புகாரை அனுப்பி வைத்தார். ஊத்துமலை இன்ஸ்பெக்டர் ராஜதுரை போலீஸ் கஸ்டடியில் உள்ளார். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!