பைன் பியூச்சர் எம்.டி. மோசடி : உறவினர் வீட்டில் ரெய்டு சொகுசு கார் பறிமுதல

Date: 2013-03-17@ 15:41:17

கோவை: கோவை பீளமேட்டில் செயல்பட்ட பைன்பியூச்சர் நிதி நிறுவனம், முதலீட்டாளர்களிடம் ரூ.818 கோடி வரை பணம் வசூலித்தது. இந்நிறுவன இயக்குநர்கள் செந்தில்குமார், விவேக் ஆகியோர் திடீரென தலைமறைவாகினர். முதலீட்டாளர்கள் புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, பைன்பியூச்சர் இயக்குநர்கள் செந்தில்குமார், விவேக், விவேக்கின் தம்பி நித்யானந்தம் ஆகியோரை கடந்த வாரம் கைது செய்தனர். 9 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கேரளாவில் உள்ள விவேக், செந்திலின் உறவினர்கள் வீடுகளில் இருந்து பல லட்சம் பணம், கிலோ கணக்கில் தங்க, வைர நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

9 நாள் காவல் முடிந்த நிலையில், செந்தில்குமார், விவேக், விவேக்கின் தம்பி நித்யானந்தம் ஆகியோரை 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் மீண்டும் விசாரித்து வருகின்றனர். இருவரிடமும் போலீசார் விசாரணையில் நடத்தியதில் கேரள மாநிலம் பாலக் காட்டில் இருவருக்கும் 55 ஏக்கர் பரப்பளவில் நிலம், ரூ.50 லட்சம் மதிப்பில் பங்களா உள்ளது தெரியவந்துள்ளது.பைன்பியூச்சர் இயக்குநர்களிடம் இருந்து இதுவரை ரூ.70 கோடி மதிப்பிலான நிலம், நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று செந்தில்குமாரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பல்லடத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் இருந்து நேற்று இரவு ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை போலீசார் மீட்டனர். இதுவரை 5 சொகுசு கார்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று 11வது நாளாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
abilify and coke link abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News