SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘தவான் விஸ்வரூபம்’ : சேவக் கதி அவ்வளவுதானா...?
2013-03-17@ 15:37:35

மொகாலி டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கிய ஷிகார் தவான் 85 பந்தில் சதம் விளாசி அனைவரையும் மிரட்டியுள்ளார். . நேற்றைய ஆட்டத்தில் அவர் 168 பந்தில் 33 பவுண்டரி, 2 சிக்சர் உள்பட 185 ரன் விளாசினார். ஆப் சைடில் தவான் ஆடும்விதம் கங்குலி ஆட்டத்தை பார்ப்பது போன்று இருந்தது. துவக்க பேட்டிங் சமீப காலமாக கவலையளித்த நிலையில் தவானின் வரவு புதுதெம்பை கொடுத்துள்ளது. மேலும் சீனியர் வீரர்களுக்கு இது சவுக்கடியாகவும் அமைந்துள்ளது. சேவக்  காம்பீர் இந்த தொடரில் நீக்கப்பட்டுள்ளனர். மோசமான பார்மால் இவர்கள் தங்களது இடத்தை இழந்தனர். தற்போது இளம்வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் பிரகாசிக்க தொடங்கியுள்ளதால் அணியின் பலமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தவான் முதல் ஆட்டத்தில் அசத்தினாலும் வரும் ஆட்டங்களில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்துதான் அவரது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை அமையும். தென் ஆப்ரிக்க தொடர் நிச்சயம் அவருக்கு சவாலாகவே இருக்கும். முதல் ஆட்டத்திலேயே முத்திரை பதித்துள்ளதால் தேர்வு குழுவினர் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குவார்கள். இதனால் சேவக் மீண்டும் அணிக்கு திரும்புவது சிக்கலாகி உள்ளது.சேவக் கண்ணாடி அணிந்து கொண்டு விளையாட சிரமப்படுவதாக கூறப்படுகிறது. உள்ளூர் அளவிலான போட்டி மற்றும் கவுண்டி ஆட்டங்களில் ஆடுமாறு தேர்வு குழு உறுப்பினர்கள் சிலர் சேவக்கிற்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர் கண்டுகொள்ளவில்லையாம். உள்ளூர் ஆட்டங்களில் ஆடி இழந்த பார்மை மீட்பதில் சேவக் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

sms spy app phone monitoring software spy apps free
walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-02-2018

  18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • policecampchennai

  சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

 • 2018Underwaterphotos

  2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

 • modi_iran_president

  டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

 • mexico_earhquake

  மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்