அஸ்லான்ஷா ஹாக்கி : 5வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்தியாபாக். மோதல்
கருத்துகள்
மலேசியாவில் நடந்துவரும் அஸ்லான்ஷா ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, மலேசியாவை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் 22 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய தரப்பில் மன்தீப்சிங், ரூபிந்தர்பால்சிங் தலா 1 கோல் அடித்தனர். மலேசிய தரப்பில் பாசில் சாரி 2 கோல்கள் அடித்தார்.
இந்திய அணி 21 என முன்னிலை வகித்த நிலையில் கடைசி ஒரு நிமிடத்தில் மலேசியா கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்தது. இந்திய அணி இந்த தொடரில் ஒரு வெற்றி, 1 டிரா மட்டுமே பெற்றது. இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி முன்பே இழந்துவிட்டது. இன்று நடைபெறும் 5வது இடத்திற்கான ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!