பாலியல் தொல்லை கிறிஸ்தவ போதகர் கைது
1கருத்துகள்
கோவை: பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிறிஸ்தவ போதகர் கைது செய்யப்பட்டார்.கோவை திருச்சி சாலை ஒண்டிப்புதூர் பகுதியில் சிஎஸ்ஐ தேவாலயம் உள்ளது. ஒண்டிப்புதூரை சேர்ந்த ஜான் மார்க் (63) மதபோதகராக உள்ளார். இவருடைய மனைவி தலைமையில் ஞாயிறுதோறும் பல பெண்கள் பிரார்த்தனை செய்வார்கள். பிரார்த்தனைக்கு வரும் பெண்களிடம் ஜான் மார்க் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தட்டிக்கேட்ட பெண்களை கொன்றுவிடுவதாக மிரட்டியும் உள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த வாரம் கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் புகார் அளித்தனர். இதுபற்றி விசாரிக்க சிங்காநல்லூர் போலீசுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். பெண் வன்கொடுமை (509), கொலை மிரட்டல் விடுத்தல் (5061) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜான் மார்க்கை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கோபி, கோவை கணபதி பகுதி தேவாலயங்களில் போதகராக இருந்தபோதும், பெண்களிடம் ஜான் தவறாக நடந்தது விசாரணையில் தெரியவந்தது.






















aarokiyasamy
TIRUNELVELI
3/17/2013 22:40:30
கிறிஸ்தவ பாதிரியாராக இருப்பவர்கள் யாரும் திருமணம் செய்யகூடாது என்பது நியதி. இந்த ஆள் திருமணம் செய்ததுமில்லாமல் பாலியல் பலாத்காரத்தில் வேறு செய்துள்ளார். உண்மையினை வெளிகொணர்ந்த தினகரனுக்கும், அந்த கிறிஸ்தவ சகோதரிக்கும் எங்கள் நன்றி. கிறிஸ்தவ மதம் தன்னுடைய நற்பண்புகளை இழந்து வருவதையே இது காட்டுகிறது. இது போன்ற காம வெறிபிடித்த பாதிரிமார்களை முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடிக்கவேண்டும். தலைமை பீடமான வடிக்கனே இன்று பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த தேவன்தான் எங்களை காப்பாற்றவேண்டும்.