பல்கலை மாணவிகள் சென்ற பஸ் மரத்தில் மோதி விபத்து : கர்ப்பிணி கோச், டிரைவர் பலி

Date: 2013-03-17@ 12:17:27

கார்லிஸ்ல்: விளையாட்டு வீராங்கனைகள் சென்ற பஸ் மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானதில், கர்ப்பிணியாக இருந்த பெண் பயிற்சியாளர், டிரைவர் ஆகியோர் பலியாயினர். பல மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள செடான் ஹில் பல்கலைக்கழக மாணவிகள், பெண் பயிற்சியாளர் உள்பட 23 பேர், மில்லர்வில்லி பல்லைக்கழக அணியுடன் போட்டியில் விளையாட சென்றனர். இரண்டு பல்கலைக் கழக அணிகளுக்கும் இடையில், Ôலேக்ராசிÕ எனப்படும் போட்டி நேற்று நடக்க இருந்தது. இந்த போட்டி ஹாக்கியை போன்றது. இதற்காக செடான் பல்கலைக்கழக மாணவிகள், பயிற்சியாளர் கிறிஸ்டினா குயிக்லே (30) என 23 பேர் பஸ்சில் மில்லர்வில்லி பல்கலைக்கு நேற்று புறப்பட்டனர். காலை 9 மணிக்கு வழியில் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மரத்தில் மோதியது.மாணவிகள் மரண ஓலமிட்டனர். இந்த விபத்தில் கர்ப்பிணியாக
இருந்த பயிற்சியாளர் கிறிஸ்டினா குயிக்லே பரிதாபமாக இறந்தார். அவருடைய வயிற்றில் வளர்ந்த 6 மாத சிசுவும் பரிதாபமாக இறந்தது. பஸ் மோதியதில் டிரைவர் உடல் நசுங்கி இறந்தார். இந்த விபத்துக்கு காரணம் இதுவரை தெரியவில்லை. செடான் ஹில் பல்கலை அணி விபத்தில் சிக்கியதால், போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்காக இன்று அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது.

rite aid load to card coupons centaurico.com rite aid store products

Like Us on Facebook Dinkaran Daily News