SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெரினா அருகே திடீர் உண்ணாவிரதம் : சட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைத

2013-03-17@ 11:23:23

சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பு நள்ளிரவில் உண்ணாவிரதம் தொடங்கிய சட்டக் கல்லூரி மாணவர்கள் 26 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனி தீர்மானம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கடலூர் உள்பட பல இடங்களில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டங்களும் நடந்து வருகின்றன. இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுதிகளில் தங்கியிருந்த மாணவ, மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். மாதிரி தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கல்லூரிகளை மூடினாலும் போராட்டம் தொடர்ந்து நடக்கும் என தமிழீழத்துக்கான மாணவர் போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, பல இடங்களிலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்கின்றன. மாணவர் போராட்டத்துக்கு பல்வேறு கட்சியினர், தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்நிலையில், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 26 பேர், மெழுகுவர்த்தி ஏந்தியபடி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் மெரினா கடற்கரை காந்தி சிலை முன்பு திரண்டனர். இலங்கை போரில் உயிரிழந்த தமிழர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்திய அவர்கள், திடீரென அங்கேயே உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து அமர்ந்தனர். டிஜிபி அலுவலகம் அருகில் இருந்ததால் போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

மாணவர்களிடம், ‘‘இங்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதியில்லை. வேறு இடத்துக்கு சென்று உண்ணாவிரதம் இருங்கள்’ என கூறினர். அதற்கு மாணவர்கள், ‘காந்திய வழியில், அறவழியில்தான் போராடுகிறோம். காலை வரை இங்கு உண்ணாவிரதம் இருந்துவிட்டு பிறகு வேறு இடத்தில் உண்ணாவிரதத்தை தொடர்வோம். அதுவரை நாங்கள் இங்குதான் இருப்போம்’ என்று போராட்டத்தை தொடர்ந்தனர். அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர்.

இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அதிகாலை 3 மணி வரை தொடர்ந்தது. ஆனாலும் மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து அங்கேயே இருந்ததால் அவர்களை போலீசார் கைது செய்யப்போவதாக அறிவித்தனர். உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை வேனில் ஏறும்படி கூறினர். அவர்கள் வேனில் ஏற மறுத்து அங்கேயே படுத்துக் கொண்டனர். இதையடுத்து, மாணவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றனர். இதற்கு அங்கிருந்த தமிழ் உணர்வாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் போலீசார் மாணவர்களை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் மாணவர் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை போலீசார் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றவர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைத்தனர். நள்ளிரவில் மாணவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

prescription coupon card prescription coupon viagra online coupon
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons
amoxicilline amoxicillin al 1000 amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்