திருவள்ளூரில் அ.தி.மு.க இளைஞர் பாசறை பொதுக்கூட்டம்
கருத்துகள்
திருவள்ளூர்: திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை எழுச்சி தின பொதுக்கூடம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா மணவாளன் நகரில் நடந்தது. பாசறை மாவட்ட செயலாளர் நரேஷ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுதாகர், ஒன்றியக்குழு தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பாசூரான், இன்பநாதன் வரவேற்றனர்.நிர்வாகிகள் லோகநாதன், பூபாலன், பட்டாபி, வலசை சந்திரசேகர், வக்கீல்கள் சீத்தாராமன், சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ரமணா கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு முன்று சக்கர சைக்கிள், ஏழைகளுக்கு இலவச தையல் மெஷின், இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் ராசு, எம்எல்ஏக்கள் மணிமாறன், பொன்.ராஜா, முன்னாள் எம்எல்ஏ அரி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், விஜயலட்சுமி ராமமூர்த்தி, ஒன்றிய நகர செயலாளர்கள் புட்லூர் சந்திரசேகர், டிடி. சீனிவாசன் திருநாவுக்கரசு, கந்தசாமி, நகரமன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கர், ஒன்றியக்குழு தலைவர்கள் அம்மு மாதவன், அம்மினி மகேந்திரன் மற்றும் பாசறை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயவீரன் நன்றி கூறினார்.
ADMK Meeting In Thiruvallur




















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!