ஊத்துக்கோட்டை-பென்னலூர்பேட்டை காவல் நிலையத்துக்கு கட்டிடம் கட்டப்படுமா?

Date: 2013-03-17@ 11:14:58

ஊத்துக்கோட்டை: தமிழக ஆந்திர எல்லைகள் பிரிக்காமல் இருந்தபோது, 1955ஆண்டு வரதயபாளையம் காவல் நிலையத்தின் புறக்காவல் நிலையமாக ஊத்துக்கோட்டை காவல்நிலையம் செயல்பட்டது. அப்போது ஒரு ஏட்டு, 2 போலீஸ்காரர்கள் இருந்தனர். 48 கிராமங்கள் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.ஆந்திரா தமிழ்நாடு எல்லை பிரிக்கப்பட்ட பிறகு 2 எஸ்ஐக்கள், 2 ஏட்டுக்கள், 5 முதல் நிலை காவலர்கள், 21 போலீசாருடன் 30 பேர் பணியாற்றினர். இடப் பற்றாக்குறை மற்றும் பழமையான கட்டிடம் என்பதால் புது கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, காவல்நிலையம் கட்டுவதற்கு கடந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், கட்டிடம் கட்டுவதற்கான மண் பரிசோதனையும் நடத்தினர். ஆனால் இதுவரை கட்டிட பணிகள் ஆரம்பிக்கவில்லை. தற்போது செடிகள் வளர்ந்து காவல்நிலையம் தெரியாத வகையில் உள்ளது. எனவே, புதிய கட்டிடம் கட்ட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுபோல், கடந்த 1910 ஆண்டு கட்டப்பட்ட பென்னலூர்பேட்டை காவல்நிலையத்துக்கும் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கிவிட்டனர். ஆனால் பணிகள் நடைபெறவில்லை. எனவே, இந்த விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்குமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

abortion pill procedures farsettiarte.it having an abortion

Like Us on Facebook Dinkaran Daily News