வாட்ச்சில் உள்ள ரகசிய கேமரா மூலம்
பெண்களை ஆபாச படம் எடுத்த இந்திய டாக்டர் லண்டனில் கைது
2கருத்துகள்
லண்டன்: வாட்ச்சில் உள்ள ரகசிய கேமரா மூலம் 100 பெண்களை ஆபாச படம் பிடித்த வக்கிரமான இந்திய டாக்டர் ஒருவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். 10 பெண்களை பலாத்காரம் செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேமரா வாட்ச்சில் 361 ஆபாச வீடியோ காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கர்நாடக மாநிலம், மங்களூரை சேர்ந்தவர் தவிந்தர்சித் பெயின்ஸ்(45). மங்களூர் பல்கலைக்கழகத்தில் 1993ல் மருத்துவ பட்டம் முடித்த இவர், 2007ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். தற்போது இவரை மருத்துவ கவுன்சில் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இவர் இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் ஸ்விண்டன் அருகே உள்ள ராயல் உட்டன் பாசட் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவர் வீடியோ கேமராவுடன் கூடிய ஒரு வாட்ச் வாங்கினார். வாட்ச் டயலில் உள்ள வீடியோ கேமராவை உன்னிப்பாக கவனித்தால்தான் தெரியும். இதை வைத்து கொண்டு, சிகிச்சைக்கு வரும் பெண்களை ரகசியமாக ஆபாச வீடியோ எடுப்பதை வழக்கமாக கொண்டார். மிகவும் ஆபாசமாக படம் கிடைத்து விட்டால், அந்த பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து விடுவார். இப்படியாக, 2010 ஜூலை முதல் 2012 மே மாதம் வரை சுமார் 100 பெண்களை வீடியோ எடுத்திருக்கிறார். அவர்கள் 14 வயது முதல் 51 வயது பெண்கள். அவர்களில் 10 பேரை பலாத்காரம் செய்திருக்கிறார்.
பெயின்ஸ் தான் எடுத்த வீடியோ காட்சிகளை கம்ப்யூட்டரில் ஏற்றி, அதை அவ்வப்போது ரசித்து பார்த்திருக்கிறார். ஒரு முறை 19 வயது பெண் பாத்ரூமில் குளிக்கும் போது நிர்வாணமாக அவரை படம் பிடித்து விட்டார். பின்னர், அதை அந்த பெண்ணிடம் காட்டி மிரட்டி, பலாத்காரம் செய்தார். மீண்டும், மீண்டும் மிரட்டவே அந்த பெண் போலீசில் புகார் செய்து விட்டார். உடனே, இவரிடம் போலீசார் விசாரித்து, வீட்டில் சோதனையிட்ட போது கம்ப்யூட்டரில் இருந்த ஆபாச காட்சிகளை பார்த்து விட்டனர். அப்போதுதான் இவரது வண்டவாளங்கள் எல்லாம் வெளியே வந்தது. கேமரா வாட்ச்சை பறிமுதல் செய்த போலீசார், 361 ஆபாச வீடியோ காட்சிகள் அடங்கிய கம்ப்யூட்டரையும் கைப்பற்றினர். இதன்பின். ஸ்விண்டன் நீதிமன்றத்தில் கடந்த 15ம் தேதி பெயின்ஸ் ஆஜர்படுத்தப்பட்டார். இவர் மீது 39 செக்ஸ் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இவரை காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இவரது மனோநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டனர். இன்டர்நெட் மூலம் வாங்கிய வாட்ச்: பெயின்ஸ் 2010ம் ஆண்டில் இன்டர்நெட்டில் வீடியோ கேமராவுடன் கூடிய வாட்ச்சை பார்த்திருக்கிறார். உடனே, அதை பற்றி விசாரித்து வெறும் 60 பவுண்டுக்கு(ரூ.4860) அதை வாங்கியிருக்கிறார். அதை சாதாரணமாக பார்த்தால், அதில் கேமரா இருப்பதே தெரியாது. டயலில் 6ம் நம்பர் இருக்க வேண்டிய இடத்தில் 6க்கு பதிலாக கேமரா பதிக்கப்பட்டிருக்கும். இதை பற்றி மற்ற டாக்டர்களிடம் பெயின்ஸ் எதுவும் சொன்னதே இல்லையாம்.






















stephenkumar
theni
3/17/2013 22:10:8
Indian best doctor.