சாலை விபத்தில் 24 ராணுவ வீரர்கள் பலி

Date: 2013-03-17@ 03:12:07

அபோதாபாத்: ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ் மலைப்பாதையில் உருண்டு விழுந்ததில் 24 வீரர்கள் இறந்தனர்; 5 பேர் காயமடைந்தனர். ராவல்பிண்டி காரிசன் நகரிலிருந்து ஜிஜிட் நகருக்கு ராணுவ வீரர்கள் ஒரு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். கைபர் பக்துன்கவா மாகாணம் கோஹிஸ்தான் மாவட்டத்தில் மலைப்பகுதியில் நேற்று பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையிலிருந்து விலகி மலைச் சரிவில் உருண்டு விழுந்தது. இதில் 24 வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த 5 வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாகிஸ்தானில் மோசமான சாலைகள், விதிகளை பின்பற்றாதது போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் ஏராளமான விபத்துகள் நடக்கின்றன.

rite aid load to card coupons centaurico.com rite aid store products
prescription coupon card go viagra online coupon

Like Us on Facebook Dinkaran Daily News