சீனாவில் 40 ஆண்டுகளில் 33 கோடி கருக்கலைப்ப

Date: 2013-03-17@ 03:11:27

பீஜிங்: மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் சீனாவில் கடந்த 40 ஆண்டுகளில் 33 கோடி கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன என்று சீன நல்வாழ்வுத்துறை இணைய தளம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் 1971ம் ஆண்டு முதல் ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நகரப் பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ளலாம். கிராமப் பகுதிகளில் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ளலாம். மீறினால் தண்டனை என்று சட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் அங்கு 1971 முதல் 2010 வரை 33 கோடி கருக்கலைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக அந்நாட்டில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகமானது, பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு கொள்கைகள் கடுமையானதாக இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நி¬லையில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தி வந்த தேசிய மக்கள் தொகை கட்டுப்பாடு மற்றும் குடும்ப திட்டமிடல் கமிஷனை நல்வாழ்வுத் துறையுடன் இணைத்துள்ளதாகவும், ஒரு குழந்தை கொள்கையை கைவிடாமல் மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது.

sms spy app click spy apps free
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
abortion pill procedures farsettiarte.it having an abortion

Like Us on Facebook Dinkaran Daily News