வடகொரியாவில் 2 முறை ஏவுகணை சோதனை

Date: 2013-03-17@ 03:10:59

சியோல்: அமெரிக்கா,தென் கொரியா கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதற்கு பதிலடியாக வட கொரியா கடந்த வாரத்தில் இரண்டு முறை ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தது என்று தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வட கொரியா தனது படை பலத்தை சோதனை செய்ய அவ்வப்போது குறைந்த தூர ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வரும் சமயத்தில் கடந்த வாரம் இரண்டு கேஎன்,02 ஏவுகணைகளை கிழக்கு கடல் பகுதியில் சோதனை செய்தது. வடகொரியா 3வது முறையாக அணுகுண்டு சோதனை செய்ததால் அந்த நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. மேலும் தென் கொரியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த வட கொரியா, ‘சியோல், வாஷிங்டன் நகரங்களைத் தாக்க அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம்’ என்று கூறி அச்சுறுத்தி வருகிறது.

my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy

Like Us on Facebook Dinkaran Daily News