பிரிட்டன் சுற்றுலா பயணியை : திருப்பி அனுப்பியது இலங்கை

Date: 2013-03-17@ 03:10:10

கொழும்பு: புத்தர் உருவத்தை பச்சை குத்தி வந்த பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணியை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது. கொழும்புவில் உள்ள பண்டாரநாயகே சர்வதேச விமான நிலையத்துக்கு பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வந்தார். அவர் கையில் புத்தர் உருவத்தை பச்சை குத்தியிருந்தார். இது குறித்து அவரிடம் கேட்டபோது, புத்தர் பற்றி விமர்சித்திருக்கிறார். பவுத்தம் குறித்த தவறான கருத்துடன் இலங்கையில் நுழைந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கருதிய விமான நிலைய அதிகாரிகள் அவரை அப்படியே இங்கிலாந்துக்கு திரும்ப அனுப்பி விட்டனர். கடந்த ஆண்டில் புத்தர் சிலைக்கு முத்தமிட்ட 3 பிரஞ்சு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கையில் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஏகான் என்ற அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ராப் பாடகரின் ஆல்பத்தில் குறைவான உடையணிந்த பெண், புத்தர் சிலை முன் நடனம் ஆடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் 2010ம் ஆண்டில் இலங்கைக்கு வர திட்டமிட்டிருந்த ஏகானுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.

sms spy app read spy apps free
coupons for cialis printable site free discount prescription cards
plavix tonydyson.co.uk plavix plm

Like Us on Facebook Dinkaran Daily News