மலேசிய கராத்தே போட்டி: சென்னை மாணவன் தேர்வு
Date: 2013-03-17@ 03:05:36

சென்னை: மலேசியாவில் மே மாதம் நடைபெற உள்ள சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க, சென்னை செம்பாக்கத்தை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் ஹரீஷ்ராஜ் (9) தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இவன், சர்வதேச போட்டியிலும் பங்கேற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ளான். மலேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், வசதி இல்லாததால் அதில் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். சகோதரன் விகேஷ்ராஜும் (5) கராத்தே மற்றும் அபாகஸ் போட்டிகளில் அசத்தி வருகிறான். இவர்களின் தந்தை நடராஜன், ‘சொந்தமாக வைத்திருந்த டாக்சிகளை விற்று மகன்களின் சாதனை முயற்சிகளுக்கு செலவு செய்துவிட்ட நிலையில், வாடகைக் கார் ஓட்டி வருகிறேன். ஹரீஷ்ராஜின் மலேசிய பயணத்துக்கு விளையாட்டுத் துறை சார்பில் உதவி செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

venlafaxine forum mdwguide.com venlafaxine 150

Like Us on Facebook Dinkaran Daily News