இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் : பைனலில் ஷரபோவா

Date: 2013-03-17@ 03:04:55

நியூயார்க்: இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட மரியா ஷரபோவா (ரஷ்யா) தகுதி பெற்றார்.
அரை இறுதியில் சக வீராங்கனை மரியா கிரிலென்கோவுடன் நேற்று மோதிய ஷரபோவா 6,4, 6,3 என்ற நேர் செட்களில் வென்றார். மற்றொரு அரை இறுதியில் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) 2,6, 6,4, 7,5 என்ற செட் கணக்கில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் ஷரபோவா , வோஸ்னியாக்கி மோதுகின்றனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நம்பர் 1 வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6,3, 6,1 என்ற நேர் செட்களில் சோங்காவை (பிரான்ஸ்) வென்றார். மற்றொரு கால் இறுதியில் இங்கிலாந்தின் ஆண்டி மர்ரே 7,6 (7,5), 3,6, 1,6 என்ற செட் கணக்கில் டெல் போட்ரோவிடம் (அர்ஜென்டினா) தோற்று வெளியேறினார். அரை இறுதியில் ஜோகோவிச் , டெல் போட்ரோ மோதுகின்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News