சடலத்தை புதைத்து விட்டு பெற்றோரிடம் ரூ2 கோடி கேட்டு மிரட்டினர்
பிளஸ் 1 மாணவன் கடத்திக் கொலை
கருத்துகள்
வாணியம்பாடி: வாணியம்பாடியில் பிளஸ் 1 மாணவன் காரில் கடத்திச் சென்று கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டான். பணத்துக்காக கொலை செய்த அவனது நண்பர்கள், ரூ2 கோடி கேட்டு போனில் மிரட்டி பேரம் பேசியபோது சிக்கினர். கைது செய்யப்பட்ட 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை பற்றி போலீசார் கூற¤யதா வது: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பூக்கடை பஜாரை சேர்ந்தவர் ரமேஷ் (40). நகைக் கடை மற்றும் நிதி நிறுவனம் வைத்துள்ளார். இவரது மனைவி இந்திரா. இவர்களது மூன்றாவது மகன் மணீஷ் (17), வாணியம்பாடியில் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். கடந்த மாதம் 23ம் தேதி இரவு 7.30 மணியளவில் பைக்கில் வெளியே சென்ற அவன், அதன்பின் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் வாணியம்பாடி டவுன் போலீசில் அவனது தந்தை ரமேஷ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் காணாமல் போன மாணவன் மணீஷை தேடிவந்தனர். இந்நிலையில் மணீஷின் செல்போனில் இருந்து அவனது தந்தைக்கு 14ம் தேதி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி, Ôஉனது மகனை உயிரோடு பார்க்க வேண்டும் என்றால், எங்களுக்கு பணம் தேவை. எவ்வளவு பணம் என்பது குறித்து பிறகு தெரிவிக்கிறோம். இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தால் விபரீதம் ஏற்படும்Õ என மிரட்டி விட்டு அழைப்பை துண்டித்தான். மீண்டும் அதே நம்பரில் இருந்து மாணவனின் தாய் இந்திராவின் செல்போனில் தொடர்பு கொண்டு, Ôஉங்கள் மகன் வேண்டுமென்றால் ரூ2 கோடி தர வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து போனில் பேசிய மர்ம நபர்கள் ரூ80 லட்சம் கேட்டனர். பிறகு ஒரு கட்டத்தில் அவர்கள் ரூ5 லட்சம் தந்தால்தான் மகனை விடுவிப்போம் என்று மிரட்டிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டனர்.
இதனால் சந்தேகம் அடைந்த மாணவனின் தந்தை ரமேஷ் இதுபற்றி வாணியம்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். வாணியம்பாடி டிஎஸ்பி மாணிக்கம் தலைமையிலான தனிப்படை போலீசார், செல்போனில் பேசிய இடத்தை கண்டுபிடித்தனர். அதனடிப்படையில் வாணியம்பாடி அருகே பதுங்கியிருந்த வாலிபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இதில் அவர் வாணியம்பாடியைச் சேர்ந்த ஜெகன் (19), கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது.
அவர் கொடுத்த தகவலின்பேரில் வாணியம்பாடி ஜாகிதாபாத்தை சேர்ந்த சிராஜ் (25), கொல்லக் தெரு லோகேஷ் (20), அரவிந்தன் (21), நேதாஜி நகர் தரணி (20), அம்பூர்பேட்டையை சேர்ந்த மவுலிராஜன் (22), பாங்கிரோடு கோட்டை பகுதியை சேர்ந்த ரயான் அகமது (21), நவீனை (20) பிடித்து விசாரித்தனர். அப்போது மாணவன் மணீஷை காரில் கடத்திச் சென்று பணம் கேட்டதும், பின்னர் அவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெகன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!