மாணவனை கொன்றது எப்படி?
கைதான நண்பன் திடுக் வாக்குமூலம்
கருத்துகள்
வேலூர்: வாணியம்பாடி மாணவன் மணிஷ் கொலை செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து கொலையாளி போலீசாரிடம் திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்
ளான். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பூக்கடை பஜாரை சேர்ந்த நகைக்கடை அதிபர் ரமேஷ் மகன் மணிஷை கொலை செய்தது எப்படி? என்பது குறித்து கொலையாளிகளில் ஒருவரான ஜெகன் போலீசாரிடம் கூறியிருப்பதாவது: எனக்கும் மணீஷுக்கும் செல்போன் வாங்குவது மூலம் சில மாதத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் நண்பர்களாக பழகி வந்தோம். மணீஷ் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனை கடத்தி பணம் பறிக்கலாம் என்று திட்டம் தீட்டினேன். அதற்கு துணையாக வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்த சிராஜ் மற்றும் ரயான், நவீன் ஆகியோர் சேர்ந்து கடத்தல் திட்டம் தீட்டினோம். கடந்த மாதம் 23ம் தேதி மாலை எனது நண்பரான டிரைவர் அரவிந்தனிடம் கார் வேண்டும் என்று கேட்டேன். அன்று மாலை அரவிந்தன் காருடன் வந்தான். அந்த கார் திருப்பத்தூரைச் சேர்ந்த சமையல் வேலை செய்யும் அரவிந்தனின் மாமா தண்டபாணிக்கு சொந்தமானது. அரவிந்தன் காருடன் வந்ததும் நான் மற்றும் சிராஜ், லோகேஷ், தரணி, நவீன், மவுலி ரயான் உள்ளிட்ட 8 பேரும் சேர்ந்து புறப்பட்டோம். நான் மாலை 6.30 மணியளவில் மணீஷுக்கு போன் செய்து, Ôவாணியம்பாடி நியூடவுன் மகளிர் கல்லூரி அருகே வாÕ என்று கூறினேன். அதேபோல் மனீஷ் வந்தான். நான் காரின் பின் சீட்டில் மறைந்து கொண்டிருந்தேன். அங்கு வந்த மணீசை லோகேஷ், தரணி, ரயான் ஆகியோர் குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றினார்கள். அப்போது மணீஷ் சத்தம்போட முயன்றான். சத்தம் போடாதே என்று கூறியபடி ஓடும் காரிலேயே அவனது வாயை அழுத்தியபடி கழுத்தை நெருக்கினோ£ம். அப்போது மணீஷ் மூக்கில் ரத்தம் கொட்டியபடி மயங்கிய நிலையில் இருந்தான். பின்னர் மூச்சு உள்ளதா? என்று பார்த்தபோது அவன் இறந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் சடலத்தை எங்கு புதைப்பது என்று திட்டம் தீட்டினோம். அப்போது ஆட்டோ டிரைவர் லோகேஷ் மின்னூர் அருகே எனக்கு தெரிந்த இடம் உள்ளது என்று கூறி தேசிய நெடுஞ்சாலை அருகே 20 அடி ஆழம் உள்ள குறுகிய பாலத்துக்கு அழைத்துச் சென்றான். பின்னர் பாலத்தின் அடியில் சடலத்தை புதைக்க திட்டமிட்டோம். அன்று இரவு 11 மணியளவில் தரணி மற்றும் லோகேஷ் ஆகிய 2 பேரும் வாடகைக்கு எடுத்து வந்த கடப்பாரை மண்வெட்டியால் குழி தோண்டினர். நாங்கள் பாலத்தின் மேல் காரை நிறுத்திக் கொண்டு யாரேனும் வருகிறார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்தோம். குழி தோண்டியவுடன் அதுவரை காரிலேயே வைத்திருந்த சடலத்தை கீழே தூக்கிப் போட்டோம். பின்னர் அவர்கள் இருவரும் புதைத்து விட்டு வெளியே வந்தனர். ஜெகன் அழைத்ததும் மணீஷ் வீட்டில் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். காரில் மணீஷை தூக்கி போட்டதும் அவனது பைக்கை கொலையாளி சிராஜ் எடுத்துக்கொண்டு ஆம்பூர் அருகே மறைவான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளார். இப்போது அந்த பைக்கையும் மீட்டுள்ளனர். இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!