போதையில் பாலியல் தொந்தரவு
நள்ளிரவில் கணவனை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி கைது
கருத்துகள்
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சுப்பேகவுண்டன்புதூர் கண்டியப்ப கவுண்டர் வீதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (37). கூலி தொழிலாளி. இவரது மனைவி கவுசல்யா (32). 7 மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். முத்துக்குமார் நேற்று முன்தினம் இரவு புழுக்கம் காரணமாக வீட்டுக்கு வெளியே படுத்திருந்தார். கவுசல்யாவும், மகள்களும் உள்ளே தூங்கினர். நேற்று காலை ரத்த வெள்ளத்தில் முத்துக்குமார் இறந்து கிடந்தார். உடலில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது. அவரது மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு அருகில் கிடந்தது. போலீசார் விசாரணை யில் கணவனை கொன்றதை கவுசல்யா ஒப்புக் கொண்டார். அவர் அளித்த வாக்குமூலம்: நாங்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தோம். எங்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதால் நான் மிகவும் சிக்கனமாக செலவு செய்து வந்தேன். ஆனால், கணவருக்கு மது, சூதாட்டம் பழக்கம் இருந்தது. தினமும் குடித்துவிட்டு வந்து பாலியல் தொந்தரவு செய்வார். அவரது தொந்தரவு எல்லை மீறியதால், தாங்க முடியாத ஆத்திரத்தால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வந்த அவர் வீட்டு முற்றத்தில் தூங்கினார். நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணவரை சரமாரியாக வெட்டினேன். அவர் பிழைத்து விடுவார் என்று பயந்து அவரது மர்ம உறுப்பையும் அறுத்து அருகில் போட்டுவிட்டு வீட்டுக்குள் படுத்துக் கொண்டேன். இவ்வாறு கூறினார். அருகில் உள்ள புதர் மண்டிக்கிடக்கும் கால்வாயில் போடப்பட்ட அரிவாளை போலீசார் கைப்பற்றினர். கவுசல்யாவை கைது செய்தனர்.
Sexual harassment in drug : Scythe to cut the husband and wife were killed at midnight




















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!