விடைத்தாள் திருத்தும் பணி 25ம் தேதி தொடக்கம்
Date: 2013-03-17@ 02:50:10

மதுரை: மாநிலம் முழுவதும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி வரும் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 14 வரை நடக்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை 8 லட்சம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். விடைத்தாள் திருத்தும் பணி மாநிலம் முழுவதும் 55 மையங்களில் நடக்க உள்ளது. வரும் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 14ம் தேதி வரை விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், Ôபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை இதற்கு முன்பு தேர்வு நடந்து கொண்டிருக்கும்போதே தொடங்கிவிடுவார்கள். முதல் கட்டமாக தமிழ், ஆங்கில விடைத்தாள்கள் திருத்தப்படும். ஆனால் இம்முறை தேர்வுகள் முடிந்த பிறகே விடைத்தாள் திருத்தும் பணி துவக்கப்படுகிறது.
இதனால், ஆசிரியர்களால் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியும். இந்த நடவடிக்கை அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் தேர்வு முடிவை விரைவாக வெளியிடும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News