இலங்கை அரசு விடுவித்த
தமிழக மீனவர் 34 பேர் ராமேஸ்வரம் திரும்பினர்
கருத்துகள்
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 34 பேர் நேற்று இரவு 10.30 மணியளவில் ராமேஸ்வரம் வந்தனர்.
இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களை தாக்கி 53 மீனவர்களை படகுகளுடன் சிறை பிடித்துச்சென்றனர். இதில் 19 பேரை தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அனுராதபுரம் சிறையில் அடைத்தனர். 34 மீனவர்கள் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர்களை நீதிபதி விடுவித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்களை இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களை நேற்று மாலை 5.30 மணியளவில் இந்திய கடலோர காவல்படையிடம், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். மீனவர்கள் 34 பேரையும், அவர்களது 5 படகுகளையும் இந்திய கடலோர காவல்படையினர் இரவு 10.30 மணியளவில் ராமேஸ்வரம் வந்தனர். போராட்டம் தொடரும்: ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற மீனவர்கள், படகுகளுடன் விடுவிக்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என்று விசைப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!