தொற்றா நோய்களால் 53% இறப்பு நிகழ்கிறத

Date: 2013-03-17@ 02:39:54

நாகர்கோவில்: தமிழ்நாடு சுகாதார திட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை சார்பில் தொற்றா நோய்களான ரத்த கொதிப்பு, நீரிழிவு நோய், இருதய நோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பு கண்டறிதல் மற்றும் சிகிச்சை திட்டத்திற்கான மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட கலெக்டர் நாகராஜன் தலைமை வகித்தார். மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சம்பத் வரவேற்றார். கூட்டத்தில் டாக்டர் மதுசூதனன் பேசுகையில், ‘ரத்த கொதிப்பு, நீரிழிவு, கேன்சர் போன்ற தொற்றா நோய்களால் மனிதனின் மொத்த இறப்பு விகிதத்தில் 53 சதவீதம் பேர் இறக்கின்றனர். மக்கள் தங்கள் பழக்க வழக்கங்கள், உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலமும், தகுந்த உடற்பயிற்சிகள் மூலமும் இந்த நோய்களின் பிடியில் இருந்து தப்பிக்கலாம்Õ என்றார். அமைச்சர் பச்சைமால் பேசுகையில், Ôகுமரி மாவட்டத்தில் தொற்றா நோய்களால் அதிக பாதிப்புகள் உள்ளது. தேங்காய் எண்ணெய் அதிகம் உணவுக்கு பயன்படுத்துதல், தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்படுகின்ற உணவு வகைகளால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறுகின்றனர். எனவே மக்கள் தொற்றா நோய்களின் பாதிப்பில் இருந்து மீள உடற் பயிற்சி செய்ய கேட்டுக்கொண்டார்.

rite aid load to card coupons link rite aid store products

Like Us on Facebook Dinkaran Daily News