சொத்து விலை அதிகமாக உள்ள நகரங்களில் மும்பை 16வது இடம

Date: 2013-03-17@ 02:38:13

மும்பை: மும்பை நகரில் ஒரு சில பகுதிகளில் வீடோ, நிலமோ வாங்கும்போது ஒரு சதுர அடிக்கு ஸி57,000 செலவு செய்ய வேண்டியுள்ளது. உலக அளவில் சொத்து வாங்க அதிகம் செலவாகும் நகரங்களில் மும்பை 16ம் இடத்தை வகிக்கிறது. நைட் பிராங்க் இந்தியா நிறுவனம் சர்வதேச அளவில் குடியிருப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதில் 2012ம் ஆண்டில் விலை உயர்ந்த சில நகரங்களில் மும்பையும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து நைட் பிராங்க் இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை இயக்குநர் சமந்தக் தாஸ் கூறியதாவது: 2012ம் ஆண்டில் மும்பை நகரில் சொத்து மதிப்பு 0.5 சதவீதம் அதிகரித்து சதுர அடி ஸி57,800 அளவுக்கு உள்ளது. மும்பை நகரின் தென்பகுதியில் உள்ள கொலாபா, கப்பே பரேட், மலபார் ஹில்ஸ் ஆகியவை மிக உயர்ந்த மதிப்புடைய பகுதிகளாக அறியப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுப்புற மாநிலங்களில் நடப்பு ஆண்டில் சொகுசு குடியிருப்புகள் விலை 5 சதவீதம் உயரும். சொத்து மதிப்பு அதிகமாக உள்ள நகரங்கள் வரிசையில் மொனாகோ, ஹாங்காங், லண்டன், ஜெனீவா, பாரீஸ் ஆகியவை முதல் 5 இடங்களை வகிக்கின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News