ஐதராபாத் குண்டு வெடிப்பு : முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது
கருத்துகள்
திருமலை,: ஏழுமலையானை தரிசிக்க மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் நேற்று மாலை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் வந்தார். அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபி ராஜு, திருப்பதி எஸ்.பி., ராஜசேகர் பாபு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருமலைக்கு வந்தார். நேற்று மாலை நடைபெற்ற சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு நான்கு மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வீதி உலா நடந்தது. இதில், அவர் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘’ஐதராபாத் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதை வெளிப்படையாக கூற முடியாது. இந்த சம்பவத்துக்கு பிறகு நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!