பலவீனமான பிரதமரால் சிறுமைப்படுத்தப்படும் இந்தியா
1கருத்துகள்
பாட்னா,: பலவீனமான பிரதமரால் சர்வதேச அரங்கில் இந்தியா சிறுமைப்படுத்தப்படுவதாக பா.ஜ மூத்த தலைவர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பீகார் மாநில பா.ஜ செயற்குழு கூட்டம் பாட்னாவில் நேற்று துவங்கியது. இதில் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான அருண் ஜெட்லி பேசியதாவது: உலக அரங்கில் இந்தியா மிக உயர்ந்த இடத்தை பெற்றுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கடி கூறுவார். ஆனால், அவரை போன்ற பலவீனமான பிரதமரால் இன்றைக்கு இந்தியா உலக அரங்கில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளது. மாலத்தீவு போன்ற சின்னஞ்சிறிய நாடுகூட இன்றைக்கு இந்தியாவை மதிப்பதில்லை. பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரரின் தலையை துண்டித்தனர். அப்சல் குருவை தூக்கில் போட்டதற்காக இந்தியாவை கண்டித்து பாகிஸ் தான் நாடாளுமன்றத்தில் தீர்மானமே போட்டுள்ளனர். இவ்வள வுக்கும் பிறகு பாகிஸ்தானுடன் பேச தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார். அரசு முடிவு எடுக்க தடுமாறுவதால் இந்தியாவுக்கு வரவேண்டிய ழீ7 லட்சம் கோடி முதலீடு வருமா? வராதா? என்பது தெரியவில்லை என்றார்.






















singaravelu
thiruvarur
3/17/2013 22:51:50
ஆம்..!பலவீனமான பிரதமர்தான்...! முரட்டுக் காளைகளுக்கு முதிர்ந்த அறிஞர்கள் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்பவர்களுக்கு அவர் பலவீனமானவர்தான் ....போதுமா ?