கனவில் கசாப் தொல்லை
வேறு சிறைக்கு மாற்றக் கோரி தீவிரவாதி ஜிண்டால் புதிய மனு
கருத்துகள்
மும்பை,: மும்பை தாக்குதல் வழக்கு முக்கிய குற்றவாளியான அபு ஜிண்டால், தன்னை தனிமை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளான். மகாராஷ்டிரா மாநி லம் பீட் மாவட்டத்தை சேர்ந்த ஜிண்டால், ஆர்தர் ரோடு தனிமை அறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்த அறையில்தான் மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கில் போடப்பட்ட பாகிஸ் தான் தீவிரவாதி அஜ்மல் கசாபும் அடைக்கப்பட்டு இருந் தான். கசாப் அடிக்கடி தன் கனவில் வருவதால் பயமாக இருப்பதாகவும், அதனால் தன்னை வேறு சிறைக்கு மாற்றும்படியும் நீதிமன்றத்தில் ஜிண்டால் மனு தாக்கல் செய்தான். இந்நிலையில், வேறு சில கைதிகளுடன் வேறு சிறைக்கு மாற்றும்படி ஜிண்டால் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்தான்.
தனிமை சிறையில் இருப்பதால் ஜிண்டாலின் மனநிலை பாதிப்பதாக, நீதிமன்றத்தில் அவனுடைய வக்கீல் தெரிவித் தார். ஆனால், ஜிண்டா லின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், அதிலிருந்து அவனுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவே தனிமை சிறையில் அடைத்து இருப்பதாகவும் சிறை அதிகாரிகள் கூறினர். இந்த மனு 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!