ஜெர்மனி பெண் பலாத்கார வழக்கு
பிட்டியின் தந்தையிடம் கேரள போலீஸ் விசாரணை
கருத்துகள்
கட்டாக்,: ஜெர்மன் பெண் பலாத்கார வழக் கில் கைது செய்யப்பட்ட பிட்டி குறித்து விசாரிக்க அவரது தந்தை மொகந்தியிடம் கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். ஜெர்மன் பெண் பலாத்கார வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிட்டிமொகந்தி, கேரள மாநிலம் கண்ணூரில் கைது செய்யப்பட்டார். பெயர் மாற்றம், போலி சான்றிதழ் சமர்பித்து இவர் வங்கியில் பணியாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பிட்டியின் தந்தை மொகந்தியிடம் விசாரணை நடத்த, கேரள சிறப்பு புல னாய்வு குழு போலீசார் ஒடிசா மாநிலம் கட்டாக் சென்றனர். ஒடிசாவின் தற்போதை டிஜிபி பிரகாஷ் மிஸ்ராவை சந்தித்தனர். அதன்பின் கட்டாக் கில் உள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்துக்கு மொகந்தியை வரவழைத்து கேரள போலீசார் விசாரணை நடத்தினர். பிட்டி கேரளாவில் தங்கியிருந்தது, மொகந்திக்கு தெரியுமா என கேட்டனர். புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் பிட்டி படித்த கல்வி நிறுவனங்களுக்கு கேரள போலீசார் சென்று அவனது கல்விச் சான்றிதழ்கள் குறித்து உண்மை நிலவரத்தை ஆராய்ந்தனர்.
German girl rape Pitti give it to inquire about the arrest of his father mokanti Kerala Special Investigation Division conducted the investigation, police said. German girl rape case pittimokanti in the past 6 years as the chief, who was arrested in Kerala Kannur.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!