ஆந்திராவில் காங்கிரஸ் சிறுபான்மை அரசு அல்ல
Date: 2013-03-17@ 02:29:29

ஐதராபாத்,: ஆந்திராவில் காங்கிரஸ் அரசு, சிறுபான்மை அரசு அல்ல என முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறியுள்ளார். ஆந்திராவில் தனி தெலங்கானா கோரி, தெலங்கானா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் போர்க் கொடி தூக்கினர். இதனால் 294 உறுப்பினர் கொண்ட ஆந்திர சட்டப் பேரவை யில் காங்கிரஸ் கட்சியின் பலம் 146 ஆக குறைந்தது. தனி மெஜா ரிட்டிக்கு இரண்டு குறை வான நிலையில், காங்கிரஸ் அரசுக்கு எதிராக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து. இதன் மீது நடந்த ஓட்டெடுப்பில் தீர்மானத்துக்கு எதிராக 142 பேர் வாக் களித்தனர். 58 பேர் ஆதரவாக ஓட்டளித்தனர். தெலுங்கு தேசம் கட்சியின் 64 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதனால் கிரண் குமார் ரெட்டி அரசு தப்பித்தது. இது குறித்து ஐதராபாத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறியதாவது: எங்கள் கட்சியின் பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் நிருபித்தோம். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. எங்கள் கட்சியின் பலம் 146 ஆக குறைந்தாலும், எனது அரசு சிறுபான்மை அரசு அல்ல. தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் 15 நாட்களுக்குள் மனு அளிக்கப்படும் என்றார்.

plavix tonydyson.co.uk plavix plm
abilify and coke abilify maintena abilify and coke

Like Us on Facebook Dinkaran Daily News