SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசுப் பதவி உயர்வில் SC,ST-னருக்கு இட ஒதுக்கீடு கிடையாது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு

2018-09-26@ 13:48:22

புதுடெல்லி: அரசுப் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசு பணிகளில் பதவி உயர்வு  வழங்கும்போது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டிய கட்டாயமில்லை என்று கடந்த 2006-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத்  தொடர்ந்து, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினர் பின் தங்கிய நிலையில் இருப்பதற்கான தரவுகளை வழங்க வேண்டும் என்றும், அரசு பணியில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை  என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி, மறுபரிசீலனை செய்யக் கோரி, மத்திய அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தீர்ப்பை கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி ஒத்திவைத்தது. இதையடுத்து, இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக  தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரசு பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறையை பின்பற்றவேண்டியதில்லை என்றும் தேவைப்பட்டால் இது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் இந்த வழக்கை 7 கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, 7 நீதிபதி அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக்கூறி உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நிராகரித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்