துளிகள்
கருத்துகள்
ரிட்டர்ன்ஸ் தாக்கலுக்கு புதிய படிவம் அறிமுகம்
புதுடெல்லி: வருமான வரி கணக்கு(ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்வதற்கு இம்மாத இறுதியில் புதிய படிவம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது பற்றி, மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் கூறியதாவது: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு 2013,14ம் மதிப்பீட்டு ஆண்டு முதல் புதிய படிவங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த படிவங்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும். ஆண்டுதோறும் வரி செலுத்துவோரின் கருத்துகளின்படியும், முந்தைய ஆண்டில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களுடனும் புதிய படிவங்கள் வெளியிடப்படுகிறது.
எலக்ட்ரானிக் உபகரணங்கள் இறக்குமதி 30% அதிகரிப்பு
புதுடெல்லி: கடந்த 2011,12ம் ஆண்டில் செல்போன், கேமரா போன்ற எலக்ட்ரானிக் உபகரணங்கள் இறக்குமதி 30 சதவீதம் அதிகரித்து ரூ1.57 லட்சம் கோடியாக உள்ளது என்று தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் மிலின்ட் தியோரா கூறினார். மாநிலங்களவையில் தியோரா கூறியதாவது: 2010,11ம் நிதியாண்டில் நாட்டின் எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி ரூ1.21 லட்சம் கோடியாக இருந்தது. இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்காமல் உள்நாட்டிலேயே எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை தயாரிக்க Ôமின்னணு தேசிய கொள்கை 2012Õ உருவாக்கப்பட்டது. இதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை மேம்படுத்த முடியும். 2020ம் ஆண்டுவாக்கில் ரூ21.60 லட்சம் கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக் ஹார்டுவேர்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் இலக்கை அடையும் வகையில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டது.
அன்னிய நேரடி முதலீடு 63 திட்டங்களுக்கு அனுமதி
பெங்களூர்: மத்திய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனத்தில் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியதாவது: இதுவரை 63 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுவீடனைச் சேர்ந்த பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனமான இக்கியா ரூ5400 கோடி முதலீட்டில் சில்லரை விற்பனை நிலையங்களை அமைக்கிறது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் பல நிறுவனங்களும் இதே முறையில் செயல்பட திட்டமிட்டுள்ளன. இந்தியா 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட உற்பத்தித் துறை ஆண்டுக்கு 10 முதல் 12 சதவீத வளர்ச்சியை பெற வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் 25 சதவீத வளர்ச்சி அடையச் செய்ய தேசிய உற்பத்தி கொள்கையை அரசு வகுத்துள்ளது என்றார்.






















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!