நிதிமுறைகேடு குற்றச்சாட்டு : எச்டிஎப்சி வங்கி விசாரணை
கருத்துகள்
மும்பை: எச்டிஎப்சி வங்கியில் நடந்த நிதி முறைகேடு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தனியார் ஆடிட்டர் நிறுவனத்தை அந்த வங்கி நியமித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் 18 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ் ஆகிய தனியார் வங்கிகள், விதிகளுக்கு புறம்பாக பினாமி பெயர்களில் ஏராளமான கருப்பு பணத்தை முதலீடு செய்ய அனுமதிப்பதாக கோப்ரா போஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டது. வாடிக்கையாளருக்கு பான்கார்டு உள்ளிட்டவை இல்லாமலேயே கணக்கு துவங்குவதையும், பல லட்சம் கருப்பு பணத்தை எப்படி முதலீடு செய்ய அனுமதிக்கிறார்கள் என்பதையும் வங்கி கிளைகளில் வீடியோ எடுத்து வெளியிட்டது. இதை வங்கிகள் மறுத்தாலும் இது பற்றி விசாரிப்பதாக கூறியிருந்தன. இந்நிலையில், எச்டிஎப்சி வங்கி இந்த நிதிமுறைகேடு குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, தணிக்கை மற்றும் நிதி ஆலோசனை நிறுவனமான டெலோய்ட்டே டச்சே டொமாட்சு நிறுவனத்தை (டீடிடி) நியமித்துள்ளது. கோப்ரா போஸ்ட் வெளியிட்ட வீடியோவில் வரும் தங்கள் அதிகாரிகளின் பேச்சுகளை இந்த ஆடிட்டர் நிறுவனம் ஆய்வு செய்து விசாரிக்கும் என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. மேலும், வங்கியில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்று அமர்சந்த் அன்ட் மங்கலதாஸ் அன்ட் சுரேஷ் ஷிராப் அன்ட் கோ என்ற சட்ட நிறுவனம் விசாரிக்கும் என கூறியுள்ளது. இதே போல், கோப்ரா போஸ்ட் வீடியோவில் இடம் பெற்ற தங்களின் அதிகாரிகள் 18 பேரை ஐசிஐசிஐ வங்கி சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது. ஆக்சிஸ் வங்கியிலும் குற்றம்சாட்டப்பட்ட 16 அதிகாரிகள், நிர்வாக பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அந்த வங்கியும் நிதி முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
Mumbai: ICICI Bank to investigate the allegations of financial misconduct by private auditor appointed by the Bank. ICICI Bank has suspended 18 officials.





















முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!