குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ1000 ஆக உயர்த்த முடிவு<

Date: 2013-03-17@ 02:02:41

புதுடெல்லி: வருங்கால வைப்பு நிதி(பி.எப்) திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும் குறைந்த பட்ச ஓய்வூதியத்தை ரூ1000 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் கொடிகுன்னில் சுரேஷ் தெரிவித்தார். பி.எப். திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ1000 ஆக நிர்ணயிக்க கோரி, மாநிலங்களவையில் பா.ஜ. உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்து தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் கொடிகுன்னில் சுரேஷ் கூறியதாவது: பி.எப் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோரில் 27 சதவீதம் பேர் ரூ500 மட்டுமே வாங்குகின்றனர். 56 சதவீதம் பேர் ரூ500 முதல் ரூ1000க்குள் பெறுகின்றனர். இப்போதுள்ள விலைவாசியில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ1000 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று அரசும் விரும்புகிறது. இதற்காக அரசின் பங்கை அதிகரித்து, ரூ1000 ஆக நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு விரைவில் முடிவெடுக்கும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இதையடுத்து, உறுப்பினர் ஜவடேகர் தீர்மானத்தை வாபஸ் பெற்றார்.

walgreens promo site free pharmacy discount cards

Like Us on Facebook Dinkaran Daily News