சுவிஸ் ஓபன் பேட்மின்டன் கால் இறுதியில் சாய்னாv

Date: 2013-03-16@ 00:25:19

பாசெல் : சுவிஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றார். கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பு சாம்பியன் சாய்னா 21,15, 21,10 என்ற நேர் செட்களில் பெத்யா நெடல்சேவாவை (பல்கேரியா) வீழ்த்தினார். உலக தரவரிசையில் மீண்டும் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ள சாய்னா,

கால் இறுதியில் சீன தைபே வீராங்கனை ஸூ யிங் டாயுடன் மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் கால் இறுதிக்கு முன்னேறத் தவறினார். மலேசியாவின் வெய் பெங் சோங்குடன் மோதிய காஷ்யப் 21,18, 7,21, 16,21 என்ற செட் கணக்கில் போராடித் தோற்றார்.

Like Us on Facebook Dinkaran Daily News