SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

25 லட்சத்துடன் தப்பிய டிரைவர் ஈரோட்டில் கைது

2018-09-24@ 00:59:16

சென்னை: சென்னைக்கு வந்த காரைக்கால் ரியல் எஸ்டேட் அதிபரை ஏமாற்றி ₹25 லட்சத்துடன், தப்பிய டிரைவரை ஈரோடு அருகே போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலகுரு (45). ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவர், சென்னையில் ஒரு இடம் வாங்குவதற்காக, ₹25 லட்சத்துடன், கடந்த 12ம் தேதி தனது காரில் புறப்பட்டார். அதே பகுதியை சேர்ந்த  டிரைவர் முகமது இர்ஷாத் (22) என்பவர் காரை ஓட்டினார்.

வேலை முடிந்ததும், அன்று இரவே மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். கிழக்கு கடற்கரை சாலை, முதலியார் குப்பம் பகுதியில் ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக  சென்றனர். அப்போது, டிரைவர் இர்ஷாத் சாப்பிட்டு ₹25 லட்சத்துடன் மாயமானார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி நகர் பகுதியில் அவர் பதுங்கி இருப்பது தெரிந்தது. நேற்று அதிகாலை அவரை போலீசார்  சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ₹17 லட்சம், ₹2 லட்சம் மதிப்புள்ள பைக், ₹3 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்களை பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்