SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆசிரியர்களின் பணி நேரத்தில் 81 சதவீதம் பிற பணிகளுக்காக செலவிடப்படுகிறது: ஆய்வறிக்கையில் தகவல்

2018-09-22@ 10:48:58

டெல்லி: நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் தங்கள் பணி நேரத்தில் ஆண்டுக்கு 42 நாட்கள் மட்டுமே மாணவ - மாணவியருக்கு பாடம் நடத்த செலவழிப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் ஒரு ஆண்டுக்கு 220 நாட்கள் கல்வி கற்பிக்க வேண்டும். ஆனால் 2015-16ம் ஆண்டில் 19 சதவீதம் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட்டுள்ளது எனவும் மீதமுள்ள நாட்களில் அரசு சார்ந்த சில வேலைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக மையம் சார்பில் சமர்பிக்கப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

மேலும் அரசு ஆசிரியர்களின் பணி நேரத்தில் 81 சதவீதம் பிற பணிகளுக்காக செலவிடப்படுகிறது எனவும் அதில் பெரும்பாலானவை கல்வி அல்லாத பிற பணிகளில் செலவிடப்படுகிறது எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்