SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் தன்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினர் : நடிகை வனிதா பேட்டி

2018-09-21@ 15:55:08

சென்னை : சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்த பின் நடிகை வனிதா பேட்டி அளித்தார்.அப்போது தம்மை வீட்டை விட்டு காலி செய்யுமாறு மிரட்டுவதாகவும் தந்தை விஜயகுமார் தம்மை அச்சுறுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். இதனிடையே சொந்த வீட்டுக்கு தாம் எப்படி வாடகை தர முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், சென்னை மதுரவாயிலில் உள்ள வீட்டு முகவரிதான் தன் பாஸ்போர்ட்டில் உள்ளது என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது,'அம்மாவுடன் இருப்பதுபோல் உணர்வதால் வீட்டில் தங்கியிருந்தேன். வீட்டில் இருந்து தந்தை விஜயகுமார் விரட்டுகிறார்.வேறு ஒருவருக்கு வீட்டை வாடகை விடுவதற்காக என்னை வெளியே அனுப்ப முயற்சிக்கிறார். வீட்டுக்கான வாடகை கொடுக்கிறேன் என்று சொல்லியும் எனது தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.காவல்துறை அதிகாரிகள் என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினர்.' இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்