SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரே வழி்

2018-09-21@ 00:48:56

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டிருக்கிறது. விரைவில் 100 ரூபாயை எட்டிவிடக்கூடும் என்று வாட்ஸ் அப்பில் விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசாவது வரி குறைக்குமா என்றால், மழை எதிர்பார்க்கும்  தார் பாலைவனமாகத்தான் இருக்கிறது. சரி பெட்ரோல், டீசல் விலை ஏறிக் கொண்டிருக்கிறது; இன்று முதல் கொஞ்சம் நடந்து பார்ப்போம் என்று யாராவது செயலில் இறங்கியது உண்டா?பெட்ரோல், டீசல் விலை ஏன் உயர்கிறது? அதன் பயன்பாடு அதிகம். அதே நேரத்தில் சர்வதேச காரணிகளும், குறைக்கப்படாத வரிகளும் சேர்கிறது. இப்போதுள்ள நிலையில், பக்கத்து பெட்டிக் கடைக்கு போக வேண்டும் என்றால்  கூட, டூவீலரில்தான் பயணிக்கும் நிலை உள்ளது. இவ்வளவு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த பின்னரும் கூட, வாகனங்களின் பயன்பாடு சிறிது கூட குறையவில்லை என்பது, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தர  அளவை பார்த்தாலே விளங்கும்.

பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என்றால், அதன் பயன்பாடு குறைய வேண்டும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவது என்றால், அதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, நிலைமையை சமாளிக்க முடியும். ஆனால், இது அரபு  நாடுகளில் இருந்தும் கொண்டு வர வேண்டியுள்ளது. ஈரானிடம் இருந்து இதை வாங்குவதை தடுக்க, அமெரிக்கா இப்போது இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதனால் கூடுதல் விலை அல்லது டாலர் மதிப்பில் பிற  அரபு நாடுகளிடம் கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டிய சூழல் இந்தியாவுக்கு அதிகரித்து வருகிறது. ஈரானிடம் இருந்து இதுவரையில், பண்டமாற்று மற்றும் ரூபாய் மதிப்பில்தான் கச்சா எண்ணெய் வாங்கப்படுவது  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலைமையை முற்றிலும் மாற்றி, நாட்டிற்கு நம்மாலும் கூட நன்மையை செய்ய முடியும். அதாவது சொந்த வாகனங்களை மிக அத்தியாவசியத்தை தவிர, முழுமையாக ஓரங்கட்டுங்கள். பொது வாகனங்களான அரசு  பஸ்கள், ரயில்களை பயன்படுத்துங்கள். நான் மட்டும் செய்வதால், பெட்ரோல், டீசல் விலை குறைந்துவிடுமா என்று கேட்பதை விடுத்து, என்னால் முடிந்ததை நானும் செய்வேன் என்று உறுதிமொழி எடுத்து செய்து பாருங்கள்.  தேச சேவை என்பது ஒரு அலாதி இன்பம். ஒரு முறை அனுபவித்துவிட்டால், அதை விட உங்களால் முடியாது. அநியாய பெட்ரோல் விலை உயர்வில் இருந்து தப்பிக்க மக்களுக்கு இப்போதிருக்கும் ஒேர வழி இதுதான்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nheru_soniaa11

  நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

 • malar_modi12

  2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

 • peruearthqq1

  பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்