SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிக் ஒழிப்பு பாளையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

2018-09-20@ 21:11:07

நெல்லை: பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி பாளையில் இன்று நடந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர். நெல்லை சேவியர் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  இன்று நடந்தது. கல்லூரி வாசலில் இருந்து தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வர் பிரிட்டோ துவக்கி வைத்தார். இதில் கல்லூரி சுற்றுச்சூழல் கழக மாணவ, மாணவிகள் 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிளாஸ்டிக் தவிர்ப்போம், துணி, காகித பையை பயன்படுத்து வோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கியை அட்டைகளை கைகளில் ஏந்தி சென்றனர். பேரணி, பாளை பஸ் நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது. பின்னர் அங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் ஜெயசீலினி, லியோன், வினோத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்