SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஹர்திக் பாண்டியா நலமுடன் உள்ளார்: பிசிசிஐ விளக்கம்

2018-09-20@ 12:29:42

துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியின்போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நலமுடன் இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா காயமடைந்தார். தசைப்பிடிப்பு காரணமாக பந்துவீசும் போது நிலை தடுமாறி கீழே விழுந்த பாண்டியாவால் எழுந்து நடக்க முடியவில்லை.

இதையடுத்து மருத்துவ குழு அவரை பரிசோதித்த பிறகு ஸ்டிரெச்சரில் தூக்கி சென்றனர். இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. இந்நிலையில் ஹர்திக் பாண்டியா நலமுடன் இருப்பதாக பிச்சிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஹர்திக் பாண்டியாவின் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவரால் எழுந்து நிற்க முடிகிறது. மருத்துவ குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார். இதனால் நாளை நடைபெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • LuklaAirportNepal

    சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

  • ParliamentAttaCK17

    நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

  • effiltowergunfire

    ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

  • FirstSnowFallShimla

    குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

  • natioanalmemeoryday

    நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்