SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய போப் பிரான்சிஸ் பதவி ஏற்றார் உலக அமைதிக்காக முதல் பிரார்த்தனை

2013-03-15@ 01:02:55

வாடிகன்சிட்டி : உலகம் முழுவதும் உள்ள 120 கோடி கத்தோலிக்கர்களின், புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் இனி, போப்  பிரான்சிஸ் என்று அழைக்கப்படும். போப் ஆண்டவர் பதவியில் இருந்து 16ம் பெனடிக்ட் முதுமை காரணமாக, கடந்த மாதம் 28ம் தேதி விலகினார். அதையடுத்து புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்காக, உலகம் முழுவதும் இருந்து 115 கார்டினல்கள் வாடிகனில் உள்ள சிஸ்டைன் சாப்பலில் (பிரார்த்தனை கூடம்), கடந்த 12ம் தேதி ஒன்று கூடி ரகசிய வாக்கெடுப்பை தொடங்கினர்.

முதல் 4 வாக்கெடுப்பில் முடிவு ஏற்படவில்லை. 5வது முறையாக நேற்று முன்தினம் மாலை நடந்த வாக்குப்பதிவில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ பெரும்பான்மை பெற்றார். இதையடுத்து, வாக்குச்சீட்டுகளுடன் ரசாயனங்கள் சேர்த்து எரிக்கப்பட்டு வெண்புகை வெளியிடப்பட்டது. இதை பார்த்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

266வது போப்பாக ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டது குறித்து கார்டினல்கள் சாப்பலின் மாடத்தில் தோன்றி முறைப்படி அறிவித்தனர். புதிய போப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ, பொதுமக்கள் முன் தோன்றினார். கார்டினலாக இருந்தும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருபவர் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ. அவர் தனது முதல் உரையில் கூறியதாவது: சகோதரர்களே, சகோதரிகளே மாலை வணக்கம்.

ஒரு பிஷப்பிடம் (தலைமை மத குருவிடம்) ரோமை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் கார்டினல்கள் கூட்டத்தின் கடமை என்பது உங்களுக்கு தெரியும். இதற்காக என்னுடைய சகோதர கார்டினல்கள், உலகின் கடைக்கோடியில் இருந்து அவரை தேர்ந்தெடுத்துவிட்டனர் (போப்பின் நகைச்சுவையை மக்கள் பெரிதும் ரசித்தனர்). உலக அமைதிக்காக நாம் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். போப் பதவியில் இருந்து விலகிய 16ம் பெனடிக்ட் முழு உடல் நலத்துடன் இருக்க இறைவனிடம் எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும்.  இவ்வாறு அவர் உரையாற்றினார்.

ரோமன் கத்தோலிக்க குழுவில் இருந்து தேர்வான முதல் போப்பான போப் பிரான்சிஸ் பெயரை தான் சூட்டிக்கொள்ள விரும்புவதாக ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவித்தார். இதையடுத்து அவரது பெயர் இனி, போப்  பிரான்சிஸ் என்று அழைக்கப்படும் என்று வாடிகன் திருச்சபை அறிவித்தது. போப் பிரான்சிஸ் நேற்று காலை ரோமில் உள்ள முக்கிய பாசிலிக் தேவாலயத்துக்கு சென்று  பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

எளிமையான வாழ்க்கை

* போப் ஆண்டவராக ஜார்ஜ் மரியோ தேர்வு செய்யப்பட்ட செய்தி வெளியானதும், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்சில் மக்கள் கார்களின் ஹாரன்களை ஒலிக்கவிட்டு, அவரது பெயரை சொல்லி வாழ்த்து கோஷமிட்டனர்.
* லத்தீன் அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் ஜார்ஜ் மரியோ. இதேபோல், சமீப காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பியரல்லாத போப் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது.
* போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டவுடன், முன்னாள் போப் 16ம் பெனடிக்டிடம் போனில் பேசி ஆசிர்வாதம் பெற்றார்.
* அர்ஜென்டினாவில் கார்டினல் பொறுப்பில் இருந்தபோதும், மிக, மிக எளிமையை பின்பற்றியவர் ஜார்ஜ் மரியோ. கார்டினல்கள் தங்கும் பங்களாவில் தங்க விரும்பாமல் சாதாரண வீட்டிலேயே இன்னமும் அவர் வசித்து வருகிறார். மேலும், தனக்கான உணவையும் அவரே சமைத்து சாப்பிட்டு வருகிறார்.
* போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்ட ஜார்ஜ் மரியோவுக்கு, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

sinemet megaedd.com sinemet
cialis cvs coupon cialis coupon cialis 20mg
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons
amoxicilline amoxicillin amoxicillin nedir

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-02-2018

    18-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • policecampchennai

    சென்னையில் காவலர் குறைதீர்ப்பு முகாம்: காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் பங்கேற்பு

  • 2018Underwaterphotos

    2018ம் ஆண்டின் நீருக்கடியில் எடுத்த சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகளை பெற்ற படங்களின் தொகுப்பு..

  • modi_iran_president

    டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

  • mexico_earhquake

    மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்