SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்தில் வினோதம்...... மேல்நோக்கி பாய்ந்த அருவி

2018-09-20@ 10:55:52

லண்டன்: இங்கிலாந்தை தாக்கிய ஹெலன் புயல் காரணமாக அருவி ஒன்று மேல்நோக்கி பாய்ந்த வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியது. இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளை ஹெலன் என்ற புயல் தாக்கியது. யார்க்சயர் பகுதியில் மாலெஸ்டைன் மலையில் கம்பிரியா என்ற அருவி பாய்ந்தோடுகிறது. மணிக்கு 130 கிலோமீட்டர் காற்று வீசியதால் அருவி மேல்நோக்கி பாயத்தொடங்கியது.

புயல் காரணமாக புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல்நோக்கி அருவி சீறிபாய்ந்ததை கண்ட சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகள் இந்த புயல் காரணமாக பலத்த சேதமடைந்தன. பல்வேறு வீடுகளின் கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இந்த புயலால் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்