SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரஷ்ய அதிபர் புதினின் திறமையை பார்த்து வியந்த ராணுவத்தினர்

2018-09-20@ 10:07:57

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் ரக துப்பாக்கி மூலம் இலக்கை குறி தவறாமல் சுட்டுத்தள்ளி ராணுவத்தினரை வியப்படைய செய்தார். மாஸ்கோவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின், துப்பாக்கியை சோதனை செய்து பார்க்க அதை இயக்கினார்.

2 ஆயிரம் அடி தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இலக்கினை குறி தவறாமல் தகர்த்தெறிந்தார். இதில் சிறப்பம்சம் என்னவெனில் அவர் சுட்டதில் ஒரு தோட்ட இலக்கின் தலைப்பகுதியை தாக்கியது. இதனை அருகிலிருந்த அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் வாயைப்பிளந்து பார்த்தனர். முன்னதாக ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் ஜூடோ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • christree_world

    உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

  • army_girlschn

    சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

  • loyola_studnt

    சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

  • military_airballon

    ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

  • pongal_potpaint

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்