SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கான் மோடிக்கு அழைப்பு

2018-09-20@ 08:07:20

இஸ்லாமாபாத்: இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் இக்கூட்டத்தில் இருநாடுகளின் வெளியுறவுகள் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு இம்ரான் கான் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விரிவாக பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு பதன்கோட் விமானப்படைத் தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்து உறவுகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் இருநாடுகளிடையே நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

  • snow_river_falls11

    மார்கழி துவங்கியுள்ள நிலையில், சென்னையை வாட்டி வதைக்கும் பனிப்பொழிவு

  • christmas_planeealm1

    உலகின் பிரமாண்ட ஒளி கண்காட்சி : பன்முக வண்ண கிறிஸ்துமஸ் விளக்குகளால் ஜொலிக்கும் விமானம்

  • sutrula_12Icehotel1

    சுற்றுலா பயணிகளை குளிர்விக்கும் பனிக்கட்டி ஹோட்டல்.! : சுவிடனில் ருசிகரம்

  • mumbai_theevibathu11

    மும்பையிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து :8 பேர் பலி; 141 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்