SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 எம்எல்ஏ பதவி நீக்க வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு வரும் : ராமதாஸ் பேட்டி

2018-09-20@ 02:04:15

திண்டிவனம்: 18 எம்எல்ஏ பதவி நீக்க வழக்கில் அரசுக்கு எதிராக தீர்ப்பு இருக்கும் எனவே இம்மாத இறுதிக்குள் அதிமுக அரசு கவிழும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.  பாமக நிறுவனர் ராமதாஸ் திண்டிவனத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பினாமி அரசு தோற்றுவிட்டது. எடப்பாடி அரசு மக்களுக்கான ஒரு திட்டத்தை கூட செய்யவில்லை. கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்று முக்கிய துறையிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. 3 ஆயிரம் பள்ளிகளை மூடப்போவதாக கூறியுள்ளனர். அவ்வாறு செய்தால் பாமக மிகப்பெரிய போராட்டம் நடத்தும். உயர்கல்வி துறையில் 4247 பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. 18 எம்எல்ஏ பதவி நீக்க வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன் கூறும் தீர்ப்பு, எடப்பாடி அரசுக்கு எதிராக இருக்கும். இம்மாத இறுதிக்குள் அதிமுக அரசு கவிழும். தீர்ப்பு வந்தவுடன் ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும். அரசின் மீது தொடர்ந்து வரும் ஊழல் குற்றசாட்டிற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நெல் கொள்முதல் அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதனால் அரசு நிர்ணயத்துள்ள விலையை விட கூடுதலாக, உயர்த்தி ₹2500 வழங்கவேண்டும்.

7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி 11 நாள் ஆகிறது. ஆனால் நடவடிக்கை இல்லை. அக்டோபர் 2ம்தேதி காந்தி பிறந்த நாள் அன்று 7 பேரை விடுதலை செய்யவேண்டும்.மணல் கொள்ளைக்கு துணை போவதாக விழுப்புரத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் வருவாய்த்துறை மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • LuklaAirportNepal

  சிறிது கவனம் சிதறினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும் உலகின் அபாயகரமான நேபால விமான நிலையம்!

 • ParliamentAttaCK17

  நாடாளுமன்றத் தாக்குதலின் 17ம் ஆண்டு நினைவு நாள்: வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தலைவர்கள் அஞ்சலி

 • effiltowergunfire

  ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு ஸ்ரார்ஸ்பேர்க் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

 • FirstSnowFallShimla

  குளிர்காலத்தின் முதல் பனிப்பொழிவை பெற்றுள்ள சிம்லா நகரம்...: இயற்கையின் மகிமையை பறைசாற்றும் புகைப்படங்கள்

 • natioanalmemeoryday

  நாஞ்சிங் படுகொலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில் சீனாவில் தேசிய நினைவு தினம் அனுசரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்