SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாய் கடித்த குழந்தைக்கு தடுப்பூசி போட டாக்டர் இல்லை: முதல்வரை சந்திக்க பெற்றோர் முடிவு

2018-09-19@ 21:12:39

கன்னியாகுமரி: கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளான முகிலன்குடியிருப்பு, சாமிதோப்பு, கரும்பாடு, சோட்டபணிக்கன்தேரிவிைள, சந்தையடி, வடுகன்தட்டு மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தையே நம்பி வாழ்கின்றனர். 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி பகல் வேளையில் 4 டாக்டர்களும், இரவு வேளையில் ஒரு டாக்டரும் பணியாற்றுகின்றனர். கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை, பல் மருத்துவம், கண் மருத்துவம், சித்தா போன்ற பல பிரிவுகள் இங்கு செயல்படுகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் கொட்டாரம், மருங்கூர், அழகப்பபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் கண்காணிப்பாளராக உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 16ம் தேதி, ேசாட்டப்பணிக்கன் தேரிவிளையை சேர்ந்த சிவபெருமான் தனது மகன் ராகவை (6) நாய் கடித்ததாக கூறி அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது நர்ஸ் டாக்டர் இல்லை. இதனால் தடுப்பு ஊசி போட முடியாது என்று கூறியுள்ளார். ஒரு வழியாக டாக்டர் இரவு 9 மணிக்கு வந்துள்ளார். அவரும் தற்சமயம் நாய்க்கடிக்கு மருந்து ஸ்டாக் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் ஆத்திரமடைந்து தகராறு செய்தனர். இதையடுத்து 9,30 மணியளவில் டாக்டர் ஒரே ஒரு தடுப்பு மருந்து இருப்பதாக கூறிவிட்டு சிறுவனுக்கு தடுப்பு ஊசி போட்டுள்ளார். இந்தநிலையில் 2வது முறையாக ராகவுக்கு தடுப்பூசி போட வேண்டி சிவபெருமான் இன்று மகனை 7.30 மணிக்கு அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையம் அழைத்து சென்றுள்ளார். அப்போது நர்ஸ் டாக்டர் இல்லை என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் 9 மணியளவில் வந்து பார்த்து தடுப்பூசி போட்டுள்ளனர். பணி நேரத்தில் டாக்டர் இல்லாததால்  பல மணி நேரம் காத்திருந்து தடுப்பு ஊசி போட வேண்டி உள்ளதே என்று சிறுவனின் பெற்றோர் மன வேதனை அடைந்தனர். இந்த நிலையில் அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலைய பிரச்னை தொடர்பாக 22ம்  தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வருகைதரும், முதல்வரிடம் புகார் அளிக்க உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்