SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா விவகாரத்தில் உயரதிகாரிகளை விசாரிக்க மேலிட உத்தரவுக்காக சிபிஐ காத்திருக்கும் தகவலை சொல்கிறார் wikiயானந்தா

2018-09-19@ 00:52:26

‘‘லேப்டாப்ல என்ன பார்க்கறீங்க...’’ என்று சீரியசாக கேட்டார் விக்கியானந்தா.

‘‘குட்கா விவரம் ஏதாவது ெதரியுதான்னு பார்க்கிறேன்... ஒரு விஷயமும் லீக் ஆகல... நீங்களே சொல்லுங்க பார்ப்போம்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘குட்கா விஷயத்தில் எல்லா தகவல்களையும் மத்திய புலனாய்வு அமைப்பு சேகரித்துவிட்டதாம்... குற்றவாளிகளை கஸ்டடியில் எடுத்து தகவல்களை வாங்கிவிட்டதாம்... அதோடு ஐடி, அமலாக்கத்துறையின் விசாரணை தகவல்கள், சிபிஐ தான் சேகரித்துள்ள தகவல்களோடு ஒப்பிட்டு பார்க்கும் பணி நடந்து வருதாம்... கல்யாணத்துக்கு 10 பொருத்தம் சரியாக பொருந்துவதுபோல குட்கா விஷயத்துல அமைச்சர், போலீஸ் அதிகாரிகளிடம் பெற்ற வாக்குமூலம், ஆதாரங்களோடு மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் உள்ள ஆவணங்கள் சரியாக பொருந்துதாம்... ஜாதகம் பொருந்துனா அடுத்தது முகூர்த்த நாள் பார்க்க வேண்டியதுதானே பாக்கி... அதற்கான பணிகள்தான் இப்போது சிபிஐ தரப்பில் நடந்து வருதாம்... ஒரு மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரி என்பதாலும் அரசியலில் செல்வாக்கு உள்ளவர்களை நெருங்கும்போது 100 சதவீத சரியான ஆவணங்களோடு விசாரிப்பதுதான் சிபிஐ ஸ்டைல்...அதன்படி பல்வேறு தரப்பில் இருந்து கிடைத்த விவரங்களை சேகரித்து அதை ஒருங்கிணைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருது... ஏறக்குறைய இந்தப் பணிகள் முடியும் நிலையில் இருக்குதாம்... இதையடுத்து அடுத்த கட்ட நகர்வுக்காக மேலதிகாரிகளின் உத்தரவை கேட்டுள்ளார்களாம்... அங்கிருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் ஓரிரு வாரங்களில் அரசியல்வாதி, அதிகாரிகளிடம் விசாரணையும் நடக்கும்... கைது படலமும் இருக்கலாம் என்று தகவல் கிடைத்துள்ளது... இது உண்மையா என்பதை நீயே விசாரித்து தெரிந்து கொள்...’’ என்று பொறுப்பை பீட்டரிடமே விட்டார் விக்கியானந்தா.
‘‘ஏழு பேரின் விடுதலையில கிண்டிக்காரர் நிலைமை என்ன...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘நான்தான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா... அமைச்சரவை தீர்மானத்தை அப்படியே சட்ட வல்லுனர்கள் குழுவுக்கு அனுப்பி வைச்சு இருக்காரம்... அவர்களின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் தகவல்... அத்துடன் இதுபோன்ற ஒரு அமைச்சரவை தீர்மானம் தனக்கு வந்துள்ளதாகவும் அது பரிசீலனையில் உள்ளதாகவும் உள்துறைக்கும் தகவலுக்காக கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளாராம்... இந்த விஷயத்தில் பாஜ ஸ்கோர் செய்யவே விரும்புவதாக சொல்றாங்க... ரா, ஐபி மூலம் சிறையில் உள்ளவர்களின் ஜாகத்தை ஏற்கனவே அலசி ஆராய்ந்த மத்திய அரசும் கிண்டிக்காரருக்கு ஒரு முக்கியமான தகவலை சொல்லி இருக்காங்களாம்... எனவே கிண்டிக்காரர் விரைவில் டெல்லிக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாக சொல்றாங்க... அதே சமயம் உள்துறையின் ஆலோசனை கேட்டு கடிதம் அனுப்பி தேவையில்லாத பிரச்னையில் சிக்க விரும்பவில்லையாம்... ஏன்னா... ஏற்கனவே உள்துறையிடம் ஆலோசனை கேட்டு இருக்காரு என்ற வதந்தி டீசர் ஒன்று வெளியாகி டிரெண்டிங் ஆயிட்டதால... அந்த முயற்சியை எடுக்க மாட்டாராம்... அதனால இனி இந்த விஷயத்துல கிண்டிக்காரரின் முடிவாக இருந்தாலும்... அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை டிக்டேட் செய்வது என்னவோ மத்தியில் உள்ள தாமரை தலைவர்களாகவே இருக்கும்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அறநிலையத்துறை அதிகாரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ரகசிய கூட்டம் போட்டாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கடவுளுக்கு அடுத்து நான்தான்னு ஒருத்தர் சவுண்ட்டு கொடுத்தாரு இல்ல... அவரு மீண்டும் ஒரு அறுவெறுக்கத்தக்க வார்த்தையை உதிர்த்து இருக்கார்... அது அறநிலையத்துறையில் உள்ள லட்சக்கணக்கான அதிகாரிகள், ஊழியர்களை கடுமையாக பாதித்துள்ளதாம்... குறிப்பாக ஆண் அதிகாரிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் கடும் கொந்தளிப்பில் இருக்காங்களாம்... இந்த விஷயத்தில் அரசு முடிவெடுத்து ‘கிங்’கானவரை கைது செய்து சிறையில் அடைத்தே ஆக வேண்டும்... அப்படி செய்யாவிட்டால் கோயில்களில் பூஜைகள் நடக்காது... நாங்கள் தெருவுக்கு வந்து போராடுவோம் என்று அரசு தரப்புக்கு ஸ்டிராங்கா சொல்லிட்டாங்களாம்... ‘கிங்’கானவாரின் வார்த்தை அறநிலையத்துறையில உள்ள அதிகாரிகளை மட்டுமில்லாம மற்ற துறையில உள்ள ஆண் அதிகாரிகளையும் கொந்தளிக்க வைச்சு இருக்காம்.... அதனால காமெடி நடிகரை காப்பாற்றியதுேபால ‘கிங்’கானவரை காப்பாற்ற ஆளுங்கட்சியால முடியாதாம்... அதிகாரிகளை இப்போது உள்ள நிலையில் ஆளுங்கட்சி பகைத்து கொள்ளும் நிலையிலும் இல்லையாம்... அதனால அவரை எப்படியும் கைது செய்துடலாம் என்ற முடிவுக்கு அரசியல் ரீதியான முடிவு எடுத்து இருக்காங்களாம்... ஆனால் குட்கா, ஊழல் உள்பட பல்வேறு பிரச்னைகள் தலைக்கு மேல் கத்தி போல தொங்குவதால... கைது வேண்டாம் என்று அதிகாரிகள் வர்க்கம் சொல்லுதாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அப்ப முடிவுதான் என்ன...’’

‘‘கைது இருக்கலாம்... இல்லாமலும் போகலாம்... விரைவில் இது தெரியும்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அந்த மருத்துவமனை ஏன் அவ்வளவு பிடிவாதமா இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போது சிசிடிவி ஆப் செய்யப்பட்டது ஏன்? யார் ஆப் செய்ய உத்தரவிட்டார்கள்... அந்த புட்டேஜ் எடுத்து வாங்கணு பலமுறை சொல்லியும் இந்த காதில் வாங்கி அந்த காதில் அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் விடுதாம்... தண்டனை வழங்க முடியாது என்பதால் இந்த பிடிவாதம் என்கிறார்கள்... எத்தனை முறை கேள்வி கேட்டாலும் குறுக்கு விசாரணை செய்தாலும் ஆப் செய்ய சொன்னது யார் என்ற விவரம் மட்டும் வெளியே வரவே வராதாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nheru_soniaa11

  நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

 • malar_modi12

  2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

 • peruearthqq1

  பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்