SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேச்சு எச்.ராஜாவை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

2018-09-19@ 00:28:52

* கைதாகும் வரை பணியை புறக்கணிக்க திட்டம்
* தமிழகம் முழுவதும் போலீசில் புகார்

சென்னை: அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசிய எச்.ராஜாவை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா பேசுகையில், அதிகாரிகள் கோயில் நிலங்களை லஞ்சம்  வாங்கிக்கொண்டு விற்பனை செய்கின்றனர். இந்த அதிகாரிகள் தங்கள் வீட்டு பெண்களை விலை பேசி விற்பவர்கள் போலத் தான் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சுக்கு தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை ஊழியர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். மேலும், எச்.ராஜாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் கடை நிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, எச்.ராஜாவின் பேச்சுக்கு  கண்டனம் தெரிவித்தும், அவரை உடனடியாக கைது செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த போராட்டம் குறித்து தமிழ்நாடு அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு பொருளாளர் சம்பத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா செல்வாக்கு இல்லாத தனிநபராகவே தெரிந்து வந்த அவர், மதத்தின் பெயரால் இயக்கம் தொடங்கி இருப்பதாக கூறிக்கொண்டு மதத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் தரம்கெட்டு பேசி  பிரபலம் ஆகி விடலாம் என பகல் கனவு காண்கிறார். அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்களை தொடர்ந்து, தரக்குறைவாக தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இந்து சமய  அறநிலையத்துறை ஏன் பாராமுகமாக இருக்கிறது என்று தெரியவில்ைல.

நாங்கள் அரசு ஊழியர்கள்தான். அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கிறோம். இதே நிலை நீடித்தால் நாங்கள் அனைவரும் வீதியில் இறங்கி அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவோம். எச்.ராஜாவை கைது செய்யும் வரை தொடர் வேலை  நிறுத்தத்தில் ஈடுபடுவோம். எச்.ராஜா மீது வழக்கு தொடர்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் காவல் ஆணையரை சந்தித்து கண்டிப்பாக புகார் மனு அளிப்போம். எங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லையெனில் நாங்கள் அறநிலையத்துறையை விட்டு வெளியேற தயாராக இருக்கிறோம்.
அரசு யாரை வேண்டுமானாலும் வைத்து கொண்டு அறநிலையத்துறையை நடத்திக் கொள்ளட்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில் திருச்சி, ரங்கம், மதுரை, சென்னை, நெல்லை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் எச்.ராஜா மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • christree_world

  உலகம் முழுவதிலும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்ணைக்கவரும் கிறிஸ்துமஸ் மரங்களின் புகைப்படங்கள்!

 • army_girlschn

  சென்னை ராணுவப் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி!

 • loyola_studnt

  சர்வதேச குடியேறுபவர்களின் நாளை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் பேரணி

 • military_airballon

  ராட்சத பலூனில் ராணுவ வீரர்கள் சாகசப் பயணம்: காஞ்சிபுரத்தில் கண்டுகளித்த பொதுமக்கள்!

 • pongal_potpaint

  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகளுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் தீவிரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்