SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சராக உள்ள பினாமியிடம் சொத்துக்களை வாங்க உத்தரவிட்ட சிறைப்பறவை குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2018-09-17@ 00:15:55

‘‘என்ன விக்கி கூல் காபி கொடுத்து என்னை கூலாக்கிறீயா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நான் என்ன தப்பு ெசய்தேன் உன்னை கூலாக்குவதற்கு... குட்கா விஷயத்துல சிக்கியுள்ள சிறைபறவைக்கு எல்லா விஷயங்களையும் சொல்லி இருக்காங்க... போயஸ்கார்டன்தான் உலகத்திலேயே பாதுகாப்பான இடம்னு என் அறையில் பல முக்கியமான ஆவணங்கள், டைரிகளை வைத்திருந்தேன்... இப்படி ஐடி ஆட்களிடம் இது சிக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல... இப்ப நமக்கு ஆதரவாக இருந்த அமைச்சர் ஒருத்தரே நமக்கு எதிரா திரும்பிவிட்டாரே... அப்புறம் அவரிடம் உள்ள நம்ம பினாமி சொத்துக்களை எப்டி கேட்டு வாங்குறது... இப்போது எல்லாமே சிக்கலா போயிடுச்சு... எது எப்டி போனாலும் பரவாயில்ல... பினாமியிடமிருந்து நமக்கு வரவேண்டிய ‘சி’யை வாங்கிடுங்க.. விட்டுடாதீங்க... வர்ற தேர்தல்ல அந்த பணம் நமக்கு உதவியாக இருக்கும்...’’ என்று தன்னை சந்தித்த ரத்த உறவிடம் சொல்லி இருக்கிறார் சிறைப்பறவை... அப்புறம் பெங்களூரு டீமும் சிறைபறவை நடவடிக்கைகளையும் அவரை சந்திப்பவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்கேனரில் கொண்டு வந்துள்ளதாம்... இன்னும் பெரிதாக ஏதாவது மாட்டும்னு நினைக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மன்னார்குடி குடும்பத்துல பயங்கர மோதல் போலிருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிறைப்பறவை வெளியில் இருந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.. எல்லாமே அவர் கட்டுப்பாட்டில் இருந்து இருக்கும்... அவர் உள்ளே போனதால... பணம், பதவி மேலே உள்ள ஆசையால ரத்த சொந்தங்கள் எல்லாம் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடிக்கப்போறேன்னு கிளம்பிட்டாங்க... இதுல விசேஷம் என்ன தெரியுமா... ஆர்கேநகர்காரருக்கு எதிராகவே எல்லா கட்சிகளின் அம்புகளும் பாய காத்திருக்கின்றன... கரன்சியை கேடயமா வைச்சு தற்காத்து கொள்ளலாம்னு ஆர்கேநகர்காரர் நினைக்கிறார்... என்றாலும் வரும் இடைத்தேர்தல்ல மன்னார்குடி குடும்பங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆர்கேநகர்காரரின் அரசியல் ஆட்டத்தை அடக்க ரெடியாக இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலம்காரர் ஆவேச பேச்சை கவனிச்சீங்களா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ம், சேலம்காரர் பொதுக்கூட்ட மேடையில ஆர்கேநகர்காரரை இந்த அளவுக்கு மோசமாக திட்டுவாருன்னு யாரும் எதிர்பார்க்கல... ரொம்ப ஆவேசமாகவே பேசினாரு... அவரால பாதிக்கப்பட்டவங்க எல்லாம் மேடையில இருக்காங்க... அவங்க வலி எனக்கு தெரியும்னு சொல்லி இருக்காரு... வழக்கமா ஜெயலலிதா சாதனைகளை பேசி முடித்துவிட்டு செல்லும் சேலம்காரர் காஞ்சி மீட்டிங்கில போட்டு தாக்கியதை தான் அதிமுக தொண்டர்கள்... அடடா நம்ம தலைவருக்கும் கோபம் வந்துடுச்சு... இதுல இருந்து ஒன்று நல்லா தெரியுது... அதிமுகவில மூத்த தலைவர்கள் எல்லாம் ஒன்றாகிட்டாங்க... இனி தொண்டர்களான நாம களத்தில் குதிக்க வேண்டியதுதான்னு சந்தோஷத்துல துள்ளி குதிச்சாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தேர்வு எழுத வந்த மாணவர்களை அரசு நிகழ்ச்சிக்கு அழைச்சுட்டு வந்த கலெக்டரை மக்கள் வறுத்தெடுத்தாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்... நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ‘தூய்மை பாரதம்’ திட்டத்தின் ‘தூய்மையே சேவை’ இயக்க தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது... மேடையில் கலெக்டர், மத்திய அமைச்சர் அமர்ந்திருந்தாங்க... காலை 10.30 மணியை கடந்தபோதிலும் நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது மாணவிகளும், அவர்களை அழைத்து வந்திருந்த ஆசிரியர்களும் அதிர்ச்சியிலும் டென்ஷனிலும் காணப்பட்டாங்க... மணி காலை 11ஐ தாண்ட தொடங்கியதும் கலெக்டருக்கு நெருக்கமான அதிகாரியின் காதை கடித்தனர்... இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த அதிகாரி கலெக்டர் காதில் கடிக்க... அங்கிருந்து வந்த உத்தரவுபடி விழா அரங்கில் இருந்து மாணவிகள் சிறிது சிறிதாக வெளியேறி பள்ளிக்கு வேகமாக போய் சேர்ந்தனர்...

அதுவரை வினாத்தாளை வைத்து கொண்டு கையை பிசைந்து கொண்டிருந்தனர் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள்... காரணம் என்ன என்று விசாரித்ததில் முதல் பருவ தேர்வு எழுத காலை பள்ளிக்கு வந்த மாணவிகளை, சிறிது நேரத்தில் அனுப்பி விடுகிறோம் என்று அதிகாரிகள் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருந்ததும், காலை 11.15 மணிக்கு தேர்வு தொடங்கிவிடும் என்பதால் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும்போதே வேறு வழியின்றி அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. பின்னர் பிரதமரின் கலந்துரையாடல் முடிய பகல் 12 ஆனது. இது குறித்த தகவல் பரவியதும்... எங்க பிள்ளைங்க அந்த சப்ஜெட்டுல குறைந்த மார்க் எடுத்தாங்கன்னா பள்ளியை முற்றுகையிடுவோம்னு பெற்றோர்கள் மிரட்டுறாங்களாம்... இதனால அந்த சப்ஜெட்ல மட்டும் யாரையும் பெயிலாக்காம கவுரவமான மார்க் போடச் சொல்லி மேலிட உத்தரவு ஒன்று வந்து இருப்பதாக ஆசிரியர்கள் மத்தியில் பேசிக்கிறாங்க...’’ என்றார் விக்கியானந்தா.                                      


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nheru_soniaa11

  நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

 • malar_modi12

  2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

 • peruearthqq1

  பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

 • Trump_japan11

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

 • kashmir_kola11

  தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்