SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

PSLV C-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

2018-09-16@ 22:25:45

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV C-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சதீஸ் தவான் முதலாவது ஏவுதளத்தில் இருந்து PSLV C-42 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இங்கிலாந்தின் 2-வது செயற்கைக்கோளையும் சேர்த்து வணிக நோக்கில் இதனை இஸ்ரோ விண்ணில் ஏவியுள்ளது. இங்கிலாந்தின் நிலப்பரப்பு, பேரிடர் கண்காணிப்பு ஆகியவற்றிற்காக இந்த செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது.  PSLV C-42 செயற்கைகோள் கப்பல், கடல்வழி போக்குவரத்தையும் கண்காணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. நோவாசர் 445 கிலோவும், எஸ் 1-4 444 கிலோ எடையும் கொண்டவை.  PSLV C-42 இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44-வது ராக்கெட் இதுவாகும்.

44.4 மீட்டர் உயரம் கொண்ட  PSLV C-42 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டது. இவ்விரு செயற்கைக்கோளையும் சுமந்தபடி செல்லும் இந்தியாவின் பிஎஸ்எல்வி சி 42 ராக்கெட், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட வட்டப்பாதையில் வெற்றிகரமாக செல்கிறது. இதுவரை 48 இந்திய செயற்கைக்கோள்களும், 209 வெளிநாட்டு செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிஎஸ்எல்வி ராக்கெட் பூமியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவு வரை சுமார் ஆயிரத்து 750 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் படைத்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்