SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.85 தொட்டது பெட்ரோல் விலை விரைவில் ரூ.90 தாண்டும்: அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்

2018-09-16@ 21:41:28

சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.85.15 ஆகவும், டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து பெட்ரோல், டீசல்  விலை உயர்வதால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்வது 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற நிலை இருந்து வந்தது. அந்த  சமயத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும், சில நேரங்களில் குறைந்தது. ஆனால் இந்த நடைமுறையில் திடீரென மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதாவது, கடந்த ஜூன் 16ம் தேதி  முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்வது நடைமுறைக்கு வந்தது. அந்த நடைமுறை வந்ததில் இருந்து தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

தினசரி விலை நிர்ணயம் நடைமுறைக்கு வந்த போது,  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 68 ரூபாய் 02 காசுகள் என்றும், டீசல் விலை 57 ரூபாய் 41 காசுகள் என்றும் இருந்தது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை  எகிற தொடங்கியது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. சென்னையில், ஒரு லிட்டர் பெட்ரோல் 13ம் தேதி 84.19 ஆகவும், 14ம் தேதி 84.39 ஆகவும்,  15ம் தேதி 84.85 ஆகவும் இருந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.85.15 ஆக உள்ளது.  அதே போன்று டீசல் விலை 13ம் தேதி ரூ.77.25 ஆகவும், 14ம் தேதி 77.79  ஆகவும், 15ம் தேதி 77.49 ஆகவும் இருந்தது. இந்த நிலையில், இன்று  டீசல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.77.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினம் தினம் புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் பெட்ரோல் விலை ரூ.85 தாண்டிவிட்ட நிலையில் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல்  விலை உயர்வால், அனைத்து விதமான போக்குவரத்து கட்டணங்களும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி ஏற்றி வரும் லாரிகள் ஏற்கனவே தங்களுடைய வாடகை கட்டணத்தை உயர்த்திவிட்டனர். இதனால்,  காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இந்த நிலையில், இதே நிலை நீடித்தால் பெட்ரோல் விலை 90 ரூபாயை விரைவில் தொடும் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளதால்  பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

  • 25-03-2019

    25-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்